Sunday, September 30, 2012

Thiruchengode Temple and histody


History :
Adi Kesava Perumal, enshrined here, instructed Gowri on the Kedara Gowri Vratam which she performed to unite with Shiva as Ardhanareeswarar. One of the 64 manifestations of Shiva - the man-woman form with Parvati constituting the left half of Shiva.
A battle of strength between Adi Seshan and Vayu, saw the former clinging tightly to Mount Meru and Vayu using his might to blow it away. The latter succeeded in blowing it away to Tiruchengode and the blood spilled by Adiseshan colored it red. Kamadhenu is said to have obtained 5 hills from Shiva, of which this was one; hence this hill with 2 stories of its origin,with rocks colored both red and yellow represents the masculine and feminine aspects of the Ardhanareeswara manifestation of Shiva





Tiruchengodu is famous for its hill and the temple on the top. Ancient and historical Thiruchengodu is crowned with Mummurthies named Arthanareeswar, Chengodu Velan and Athikesava Perumal. The ancient Arthanareeswar temple was mentioned in the Tamil work Silapathikaram as Neduvelkunru.




 Ancient walls, mandapams and sculptured pillars (now in a state of disrepair) add to the awe that this temple perpetuates, on top of the hill. The motorway and the renovated Rajagopuram are of recent origin. True to the name Nagagiri, there is a 60 ft long snake carved on the hill.
Although the sanctum faces the West, entrance to it is from the South. A majestic image of Ardanareeswarar  adorns the sanctum.There is a water spring at the foot of the image  which is said to have been divinely manifested (Uli Padaa Uruvam). There are inscriptions here from the times of Parantaka Chola, Gangaikonda Chola, the Vijayanagar & Mysore Kings and the Nayaks.









பழங்காலத்தில் இந்நகர் திருக்கொடிமாடச் சென்குன்றனூர் எனவும், திருச்செங்கோட்டாங்குடி எனவும் பெயர் பெற்றது. சம்பந்தரின் தேவாரப்பாடலிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது


இது கொங்கு நாட்டிலுள்ள ஏழு சிவ தலங்களில் ஒன்றாகும். இது கொங்கு நாட்டைச்சேர்ந்த கீழ்கரை பூந்துறை நாட்டை சார்ந்தது ஆகும். காவிரியின் மேற்கு புறம் உள்ளது மேல்கரை பூந்துறை நாடாகும்,காவிரியின் கிழக்கு புறம் உள்ளது கீழ்பூந்துறை நாடாகும். சிலப்பதிகாரத்தில் இந்நகர் நெடுவேல் குன்று என கூறப்பட்டள்ளது. மலை மீதுள்ள முருகனை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார். கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் இவ்விடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகருக்கு தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி எனப் பல பெயர்களும் உள்ளது.
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் "வெந்தவெண் ணீறணிந்து" முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அதன் முதல் செய்யுள்

வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்து அருளிக்
கொந்து அணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.





செந்நிறத்தில் அமைந்த மலையின் உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் மாதொரு பாகர் சன்னதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் அல்லாமல் 6 அடி முழு திருமேனியுடன் காட்சியளிக்கிறார். பாதி புடவை - பாதி வேட்டி அலங்காரத்துடன் மூலவர் (சிவன்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாசாணத்தால் ஆனது.
இம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.
இம்மலை மீது ஏற 1250 படிக்கட்டுகள் கொண்ட பாதை உள்ளது. தற்போது மலை மீது ஏற சாலை வசதி செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் மூலம் இதனை அடையலாம். படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு முதலில் அமைந்தது முருகனுக்கான கோயில் ஆகும். அதையொட்டியே இந்நகரின் பெயர் அமைந்துள்ளதை கவனிக்கலாம்..